கீழடியில் 2,600 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

கீழடி 6-ஆம் கட்ட அகழாய்வில் முதல் கண்டுபிடிப்பாக 2,600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியை அடுத்த அகரம், கொந்தகை , மணலூர் உள்ளிட்ட இடங்களில் 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கொந்தகை கிராமத்தில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்புடைய வட்ட வடிவிலான ஒரு அமைப்பு தென்படும் நிலையில் அதனை முழுமையாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

50 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டறியப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே