சென்னையில் லாரி மூலமாக வழங்கப்படும் குடிநீர் விலையை குடிநீர் வாரியம் 5 சதவீதம் உயர்த்தி உள்ளது.
அந்த வகையில் 6000 லிட்டர் குடிநீர் 435 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 499 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இணைய வழியில், முன்பதிவு செய்பவர்கள் தங்கள் வங்கி அட்டையின் மூலமாகவோ அல்லது கடன் அட்டைகளின் மூலமாகவோ கட்டணம் செலுத்தலாம்.
தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்பவர்கள் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் லாரியை மட்டுமே பணமாக செலுத்தி கொள்ளும் வகையில் முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் லிட்டர்களும், தனி வீடுகளில் வசிப்பவர்கள் 3 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 9 ஆயிரம் லிட்டர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வணிகரீதியாக வழங்கப்படும் லாரி குடிநீரின் விலையையும் சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது.
அதன்படி மூன்றாயிரம் லிட்டர் 500 ரூபாய் என்றும், 6000 லிட்டர் குடிநீர் 735 ரூபாய் என்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.