கல்லூரிகள் திறப்பு குறித்து நவ.12ஆம் தேதி முடிவு – உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

கல்லூரிகள் திறப்பு குறித்து நவ.12ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் , கல்லூரிகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக அரசு பெற்றோருடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் இன்று சென்னையில் 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா என்பது குறித்து வரும் 12 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தற்போது பள்ளி ,மாணவர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் கல்லூரிகள் குறித்த முடிவு எதன் அடிப்படையில் எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே