டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதள விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் கே.பி. அன்பழகன்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் 10.08.2020 முதல் 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 04 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. 

இது பற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் 51 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16,940 மாணாக்கர் பதிவு செய்துள்ளனர்.

04.08.2020 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரி மாணாக்கர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு (Diploma) சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் 10.08.2020 முதல் 20.08.2020 வரை மேற்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை விண்ணப்பப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே