வரும் 5 ஆம் தேதிக்குள் கூட்டு வட்டி தொகை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் – மத்திய அரசு

சிறிய அளவிலான கடன் பெற்று கொரோனா காலத்தில் கட்டாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் நவம்பர் 5ஆம் தேதிக்கும் கூட்டு வட்டி வாபஸ் பெறப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

கொரோனா காலத்தில் வங்கி கடனை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் வங்கிகள் கடன் தொகைக்கு வட்டிக்கு வட்டி விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 2 கோடிக்கு உள்ளிட்ட அளவில் சிறிய அளவிலான கடன்களை பெற்றவர்கள் கொரோனா காலத்தில் கட்டாத தொகைக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வீட்டுக்கடன், வாகன கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்களுக்கு இந்த உத்தரவு செல்லும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று , உச்ச நீதிமன்றத்தில், 6மாத கடன் மொரடோரியம் காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ள கூட்டு வட்டித் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில்வரும் நவம்பர் 5 ஆம் தேதிக்கும் திருப்பிச் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே