தமிழகத்தில் இன்று (அக்.27) 2522 பேருக்கு கொரோனா..; 27 பேர் உயிரிப்பு..!!

தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,14,235-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,983-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,75,518- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 27,734- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 695 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197077-ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே