அனைத்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

கரோனா தொடர்பாக மதரீதியான அவதூறு கருத்துகள் பரவுவதைத் தடுக்க அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் 45 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதில் 15 கிறிஸ்தவ தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மற்றவர்களுடன் ஆலோசனை நடைபெறும்.

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், கரோனா நோய்த்தொற்று குறித்து மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென தலைமைச் செயலர் வலியுறுத்தலாம் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே