10,11,12-ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்குகிறது.

 • 16ஆம் தேதி ஆங்கிலத்திற்கும்,
 • பதினெட்டாம் தேதி கணக்கிற்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
 • அறிவியல் தேர்வு 20ஆம் தேதியும்,
 • சமூக அறிவியல் தேர்வு 23ஆம் தேதியும் நடைபெறுகிறது.

பதினொன்றாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி தொடங்குகிறது.

 • அன்றைய தினமும் தமிழுக்கும், மறுநாள் ஆங்கிலத்திற்கும் தேர்வு நடக்கும்.
 • 14ஆம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் பாடங்களுக்கும்,
 • 16ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
 • இருபதாம் தேதி கணினி அறிவியல், புள்ளியியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
 • 23ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு பாடத்துடன் அரையாண்டு முடிவடைகிறது.

12-ம் வகுப்புக்கு

 • டிசம்பர் 11ஆம் தேதி தமிழுக்கும்,
 • மறுநாள் ஆங்கிலத்திற்கும் தேர்வுகள் நடைபெறும்.
 • பதிநான்காம் தேதி கணிதம், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன.
 • 16ஆம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்ப பாடங்களை பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள்.

உயிரி வேதியியல், புள்ளியியல், விருப்பப்பாடம் உள்ளிட்ட பாடங்களுக்கு டிசம்பர் 18ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

டிசம்பர் 20ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கான வேதியியல், கணக்கு பதிவியல் புவியியல் படிப்பவர்கள் தேர்வு எழுதுவார்கள்.

இறுதியாக, 23ஆம் தேதி நடைபெறும் உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வுதான் அரையாண்டு தேர்வு முடிவடைகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே