நாட்டின் பல்வேறு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுக்கம்மா என்ற பெயரில் நடக்கும் நவராத்திரி விழாவில் நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

விழாவில் ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில், சர்ஜிக்கல் தாக்குதலை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், துர்கா பூஜைக்கு பிரம்மாண்டமான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பந்தலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயிலில் அபிநந்தன் படம் இடம்பெற்றிருந்தது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திருநங்கைகள், துர்காவிற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே