வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக வேளாண்துறை

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படை விவசாய நிலங்களை சூரையாடி வரும் நிலையில் அவற்றால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்துள்ள வெட்டுக்கிளிகள் படை மத்திய பிரதேசதம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேளாண் வயல்களை துவம்சம் செய்து வருகிறது.

இதுவரையிலும் தக்காண பீடபூமியை கூட தாண்டியிராத இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியா மாநிலங்களில் புகுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் பெரும் இடர்பாடுகளை சந்தித்துள்ள விவசாயிகள் தற்போது வெட்டுக்கிளி படையெடுப்பால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வெட்டுகிளிகள் படை தமிழகத்திற்கும் வந்து விடுமோ என்ற பயம் தமிழக விவசாயிகளிடமும் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக வேளாண் துறை வெட்டுக்கிளி படைகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்றும், எனினும் பாதுகாப்பு முன்னெச்ச்சரிக்கையாக செயல்பட வேண்டியது உள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே