#clapforourcarers : நாடு முழுவதும் மக்கள் கைதட்டி கரகோஷம்…

மக்கள் ஊரடங்கின்போது வெளியில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரை மக்கள் பாராட்டவேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதற்காக இன்று மாலை 5 மணிக்கு மக்கள் பாராட்டவேண்டும் எனக் கூறி தமிழக அரசு வீடியோ வெளியிட்டுள்ளது.

இதனிடையே மக்கள் ஊரடங்கு அமலில் உள்ள போது பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், சுய ஊரடங்கின்போது வீட்டில் இருப்பது மட்டுமல்ல, தங்களது நகரத்திலும் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்து கைத்தட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகையால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கைதட்டல் எழுப்பினர்.

கொரோனா இடர்பாடுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களை தீயணைப்பு வாகனத்தின் சைரனை ஒலிக்க விட்டு தீயணைப்புப் படையினர் கைத்தட்டி பாராட்டினர்.

கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே