ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டுமென ஏற்கனவே செப்டம்பர் 30 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன என்பதும் வங்கிகணக்கு, குடும்ப அட்டை உள்பட பல ஆவணங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஆதார் எண்ணை பான் என்னுடன் கண்டிப்பாக அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது.
செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.