தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது.

அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே