மகாராஷ்டிரா, ஹரியானாவில் இன்று மாலையுடன் முடிவடைகிறது பரப்புரை

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 288 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல 90 தொகுதிகளில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.

இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே