தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
புனேவில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் இடம்பெற்றுள்ளார்.