41 மருத்துவ மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உத்தரவு

நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டில் இருந்து மீள்வதற்கு உள்ளாகவே தனியார் மருத்துவ கல்லூரிகளில் அறை கண்காணிப்பாளர்கள் உதவியுடன் மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருவத்தேர்வில் முறைகேடு செய்ததாக இரண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இரு கல்லூரிகளிலும் அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பது சிசிடிவி கேமரா மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் விடைத்தாள்களை பரிமாறிக்கொள்வது, விடைகளை நகலெடுத்து எழுதியது போன்றவை சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அந்த தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த கல்லூரி வளாகத்திலேயே தேர்வுகளை நடத்த தடை விதித்தும், தேர்வில் காப்பியடித்த 41 மாணவர்களும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த தேர்வை மீண்டும் எழுதவேண்டும் என்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே