மாமல்லபுரம் கடற்கரையில் துப்புரவு பணியை மேற்கொண்ட பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவை பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜாகிங் செய்தபடியே, செல்லும் வழியில் குப்பைகூளங்களை அகற்றி துப்புரவு பணியில் ஈடுபடுவதை பிளாகிங் எனக் குறிப்பிடுகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக மாறியதைத் தொடர்ந்து, பிளாகிங் எனப்படும் இந்த முன்னுதாரணமான நடைமுறை உலகம் முழுவதும் பரவி வருகிறது.

PM Modi on a cleaning mission (PLOGGING) at Mamallapuram beach

பிளாகிங் எனப்படும் இந்த முறையில், நடைப் பயிற்சி மேற்கொண்ட படியே பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றியதாகவும், 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இந்த பணியை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொது இடங்கள் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம் என்றும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதை உறுதிசெய்வோம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே