சஸ்பெ‌ண்ட் செ‌ய்‌ய‌‌ப்பட்‌ட 8 எ‌ம்பிக்‌களும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்..!!

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவையின் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதாக்கள் தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இருக்கைக்கு முன் சென்ற எம்பிக்கள் அவை விதிகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து எறிந்தனர்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூடியதும் பேசிய அவைத் தலைவர் வெங்கைய நாயுடு, எம்பிக்கள் 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவதாக தெரிவித்தார். 

ஒரு வாரம் அவை நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது என்று கூறிய நிலையில், தற்போது கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே