ஆக்சிஜன் கருவியுடன் வேலைக்கு வந்த வங்கி மேலாளர்.. என்ன காரணம்..? (VIDEO)

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ நகரில் இயங்கி வரும் அரசு வங்கியில் பணியாற்றி வரும் ஊழியரான அரவிந்த் குமார் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு விடுப்பு கொடுக்க உயர் அதிகாரிகள் மறுத்த காரணத்தினால் ஆக்ஸிஜன் உதவியுடன் வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார் அவர். அதோடு உயர் அதிகாரிகள் மீது குற்றமும் சுமத்தி, அது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.

அது பரவலாக பேசு பொருளாகிய நிலையில் ஊழியர் அரவிந்த் குமார் இப்படி அப்பட்டமாக குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவவும், வங்கியில் வாங்கிய கடனை தட்டிக் கழிக்கவும் இந்த டிராமாவை அரங்கேற்றம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரவிந்த் குமாரின் வீடியோவில் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி தான் குணமாக எப்படியும் 90 நாட்கள் ஆகும் என்றும். தனது நுரையீரலில் தொற்று பாதிப்பு படர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினரின் உதவியுடன் இந்த வீடியோவை அவர் படம் பிடித்து அப்லோட் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே