2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் 216 கோடி கரோனா தடுப்பூசிகள் தயாராகி வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என உறுதி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி அவதூறு பரப்பி வருவதாகவும், டூல்கிட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பின்னணியில் இருந்து செயல்பட்டது எனவும் குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே