சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது – மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் விகிதம் அதிகம் என மு.க.ஸ்டாலின் என கூறினார்.

காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது, நாட்டிலேயே கரோனா தொற்று அதிகமாகப் பரவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த நோய் தொற்றில் 10% சென்னையில் தான் உள்ளது.

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2- வது மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் 10 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற நிலை உள்ளது. 

மே 15ம் தேதி தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,718 ஆக இருந்தது.

சரியாக ஒரு மாதம் கழித்து ஜூன் 15-ம் தேதி இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்தது வேதனையளிக்கிறது. 

கரோனா பாதித்து உயிரிப்பவர்களின் விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவது ஏன்? கரோனா இறப்பு விவரங்களை தமிக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும்.

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. சமூகப் பரவல் இல்லை என்று பொய்யானத் தகவல்களைக் கூறி அரசியல் ஆதாயம் தேட அரசு முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே