தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு அதிகாரிகள் பலரும் தொடர்ந்து களப்பணியாற்றி வந்த நிலையில் , களப்பணியாற்றிய அதிகாரிகள், அமைச்சர்கள், காவலர்கள், சுகாதாரத்துறையினர், மருத்துவ குழுவினர் என பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதியானது.
அதிமுக கட்சியில் அமைச்சர் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் ஆகியோருக்கும், பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்கனவே உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் , அமைச்சர் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கபிலுக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.