தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அதிமுக அலுவலகத்தில் இன்று முதல் விநியோகம்

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கான  விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது.

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்து இருந்தது.

அதன்படி கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக கட்சி நிர்வாகிகள் உரிய கட்டணம் செலுத்தி ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர்.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனு வாங்கும் பணி நேற்று துவங்கியது.

வரும் 20 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.

சென்னை மேயர் பதவிக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட இளைஞர் அணியினர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே