சென்னை ஐஐடியில் 2011ம் ஆண்டு தொடங்கி இதுவரை தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
- மே 4, 2011 நித்தின் ரெட்டி, ஆந்திராவை சேர்ந்த இறுதியாண்டு எம்.டெக் மாணவர் இறுதி ஆண்டு பாடத்தை மீண்டும் தேர்ச்சி பெற வற்புறுத்தியதால் மனமுடைந்து விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
- ஏப்ரல் 8, 2012 – குல்தீப் யாதவ், உத்தரபிரதேசத்தை இராண்டாம் ஆண்டு பி.இ. மாணவர் காதல் தோல்வி காரணமாக விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அதே அண்டு ஆகஸ்ட் 22 – மானசா மெருகு, ஆந்திராவை சேர்ந்த முதலமாண்டு எம்.டெக் மாணவி குடும்ப பிரச்சனையால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- நவம்பர் 4, 2013 – ஆகாஷ் குமார் மீனா, ராஜஸ்தானை சேர்ந்த முதலாமாண்டு பி.இ மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- செப்டம்பர் 22, 2015 – நாகேந்திர குமார் ரெட்டி, ஆந்திராவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மெ.டெக் மாணவர் தேர்வு தோல்வி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- ஒருமாத இடைவெளிக்குள்ளாக அக்டோபர் 19 – ராகுல் ஜி பிரசாத் கேரள மாநிலத்தை சேர்ந்த இறுதி ஆண்டு பி.டெக் மாணவர் தேர்வில் தோல்வியடைந்ததால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஜூலை 14, 2016, மகேஸ்வரி என்ற ஆந்திராவை சேர்ந்த ஆய்வு மாணவி, விடுதி அறையில் அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- டிசம்பர் 5, 2018 – அதிதீ சிம்ஹா, பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட ஐஐடி பேராசிரியர் குடியிருப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
- ஜனவரி 1, 2019 – ரஞ்சனா குமாரி, ஜார்கண்டை சேர்ந்த ஆய்வு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- ஜனவரி 28, 2019 – கோபால் பாபு, உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதலாமாண்டு எம்.டெக் மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்
- செப்டம்பர் 22, 2019 – ஷாஹல் கோர்மத், கேரளவை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர் வளாக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- நவம்பர் 9, 2019 – பாத்திமா லத்தீப், கேரளாவை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி மத ரீதியான ஒடுக்குமுறையால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.