கலைஞர் கருணாநிதியின் எதிர்பார்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நிறைவேற்றி வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, அதுவும் கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் கமல்ஹாசனின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதற்காக காலை அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தை நேரத்தில் கமல்ஹாசனின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் எல்லோரையும் விமர்சிக்கும் கமல்ஹாசன் திமுகவை அவ்வளவாக விமர்சிப்பது இல்லை.

அதனால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான அச்சாராமா என்ற கோணத்திலும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

நேர்மையான அரசியல், லஞ்சம் கிடையாது… வோட்டுக்கு பணம் கிடையாது…

ஊழலை அகற்றுவோம் என்று இத்தனை நாட்களாக தமிழகத்தில் வலம் வந்த கமல் கட்சியினர், கடலூரில், மினி வேனில் மூட்டை மூட்டையாக கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்களும், சில்வர் டிஃபன் பாக்ஸ்களும் கொண்டு செல்லும் போது பிடிபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கலைஞரின் சக்கர நாற்காலி குறித்து கேலி பேசிய கமல், இப்போது, கலைஞரின் மேலுள்ள எதிர்பார்ப்பை ஸ்டாலின் மிகச் சிறப்பாக செய்வதாக பாராட்டி வாழ்த்துகிறேன்.

ஆக, தேர்தல் அரசியலை கமல் நன்றாக கற்று தேர்ந்து விட்டார் என்று கலாய்த்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே