தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நாடகங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் குறையவில்லை என்பதை பறைசாற்றும் விதமாக இந்த நாடகத்திற்கு அமைந்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்தும் இந்த நாடக விழாவில் பெண் சுதந்திரம், கருத்துரிமை, இன்றைய அரசியல் நிலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கும் நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன.
இதுபோன்ற நாடக திருவிழாக்கள் தொடர வேண்டுமென்கிற விருப்பத்தை பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.
நாடகங்கள் நடத்துவதற்கு பிரத்தியேகமான அரங்கினை தமிழக அரசு ஏற்படுத்தினால் நாடகங்கள் மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்பது நாடக கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.
சினிமாவும், தொலைக்காட்சியும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்ட சூழலிலும், நாடகங்கள் மீதான ஆர்வம் மக்களுக்கு குறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நாடகத் திருவிழா அமைந்திருக்கிறது.