தந்தை பெரியாரின் 46-வது நினைவு நாள்…

தந்தை பெரியாரின் 46-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே