பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள், குழந்தைகள் வாட்ஸ்அப் மூலம் தகவல் அளிக்கலாம் : ஏ.கே விஸ்வநாதன்

பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள், குழந்தைகள் உடனடியாக வாட்ஸ் அப், முகநூல் மற்றும் இ-மெயில் மூலமாக காவல்துறைக்கு தகவல் அளிக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து காவல் துறையினருக்கான நவீன ரோந்து வாகனம் மற்றும் பெண்கள் போக்குவரத்து தனிப்படையை அவர் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரின் ரோந்து பணிகளை எளிமைப்படுத்தும் பொருட்டு நவீன ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் பெண்கள் போக்குவரத்து தனிப்படை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே