தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.

முதல்நாளான இன்று தமிழ், பிரெஞ்சு, இந்தி, உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வை மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

தேர்வையொட்டி 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டை விட 116 மையங்கள் அதிகமாகும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுயவிவரங்கள் சரிபார்க்கவும் தரப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஒருமணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே