கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வர தடை!

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் சீனா, இத்தாலி உட்பட 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இச்சூழலில் சென்னை விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் தனியாக பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில சுகாதாரத்துறை மூலம் மாவட்ட, கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே