ராம்ராஜ் காட்டனின் 101வது கிளை கோவையில் திறப்பு

கோவை சாய்பாபா காலனியில் ராம்ராஜ் காட்டனின் 101வது புதிய கிளை இன்று திறக்கப்பட்டது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நூறு கிளைகளை நிறுவி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அதன் 101வது கிளையை சாய்பாபா காலனியில், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வெங்கடாசலம் இன்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.நாகராஜன், நெசவாளர்களை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிறுவனத்தை தொடங்கியதாகவும், இதன் மூலம் நமது பாரம்பரிய வேட்டி சட்டையின் மதிப்பு உயர்ந்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே