சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் செட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த ஆண், பெண் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நேற்று பிற்பகலில் வெளியே சென்றுவிட்டு பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது பெற்றோரும் நண்பர்களும் பல இடங்களில் தேடி உள்ளனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள செட்டில் நின்று இருந்த காருக்குள் சுரேஷ் அவருடைய காதலி ஜோதிகாவுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
எனினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.