தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகர் சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை கடந்து வந்த பாதை நிகழ்ச்சி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே, பெரும்பாலான அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது போன்ற நிகழ்வு நடப்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

சமூகத்தை பற்றியும் யோசிப்பது தான் வாழ்க்கை என தெரிவித்த அவர், குடும்பம், சமூகம், செய்யும் தொழில் மூன்றுக்கும் சரிசமமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னர் பேசிய நடிகர் கார்த்தி, வாழ்க்கையில் யாருடன் உங்களை ஒப்பிட வேண்டாம் எனக் கூறினார்.

அடுத்தவரின் வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடையுங்கள் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பேசிய நடிகர் சிவக்குமார், தனது மகன் சூர்யா எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

இதேபோன்று உழவன் ஃபவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்று கூறினார். நேர்மையாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் வாழ்வில் உயரலாம் என்றும் நடிகர் சிவக்குமார் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே