தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் : மு.க.ஸ்டாலின்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு நடத்துகிற மாநாடு கோரிக்கையை முன்வைத்து இருப்பதை குறிப்பிட்டு உள்ளார்.

தொன்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்டிடும் முயற்சிக்கான போராட்டங்கள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன.

அந்த வகையில் இந்த மாநாடு வெற்றி அடைய வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என விரும்புவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே