கோவையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலாளர் ஃபீலா ராஜேஸ் நாள்தோறும் வெளியிட்டு வருகிறார்.
இருப்பினும் இன்று தலைமைச் செயலர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9118 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பார்த்தால் இன்று கோவை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.