அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மதிப்பிலான சாலைப்பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதுபோன்று தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரம் இல்லை என்றும்; சட்ட ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழகம் என மத்திய அரசே விருது வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே