ஜோதிகாவின் தம்பியான கார்த்தி – அசத்தலானப் போஸ்டர் வெளியீடு !

கார்த்தி ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்துக்கு தம்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கைதி படத்துக்கு அடுத்து நடிகர் கார்த்தி ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு சத்யராஜ், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைக்கதைக்காக அங்கிகாரம் பெற்ற மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் இந்தப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

மேலும் இதுவரை பெயர் அறிவிக்கப்படாத இந்த படத்துக்கு தம்பி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

அது மட்டுமின்றி பாபநாசம் படம் போலவே இதிலும் பல ட்விஸ்ட்டுகளை எதிர்பார்க்கலாம் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் ஏற்கனவே தம்பி என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே