வங்கிகள் திவால் ஆனால் டெபாசிட் பணத்திற்கான காப்பீடு – அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

வங்கி டெபாசிட்டுகளுக்கான காப்பீட்டு தொகையை, தற்போது உள்ள ஒரு லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்த சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக வங்கிகள் திவால் ஆகும் பட்சத்தில், அதில் செய்யப்பட்ட டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்டிருக்கும்.

எவ்வளவு தொகை கணக்கில் இருந்தாலும், காப்பீடு மூலம் 1 லட்சம் ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

இந்நிலையில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கடன் மோசடியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனை கருத்தில் கொண்டு வங்கி டெபாசிட்டுகளுக்கான காப்பீட்டு தொகை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டம் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே