விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.
இசை – ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது.
இப்படத்தில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் போன்றோர் நடிக்கிறார்கள்.
மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
இப்படத்தின் 2-வது போஸ்டர் வெளியாகியுள்ளது.