நடிகர் விஜய்யின் 64ஆவது படத்துக்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப் போவதாக அறிவித்தப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துப் போனது.

அதன்பின் விஜயின் தீவிர ரசிகரான நடிகர் சாந்தனு பாக்யராஜ், பேட்ட நடிகையான மாளவிகா மோகனன், வட சென்னை ஆண்ட்ரியா ஜெரேமியா, 96 கவுரி கிஷன் ஆகியோர் படக்குழுவில் இணைந்தனர்.

MASTER First Look

மேலும் இந்தப் படத்தின் போஸ்டர் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ஐந்து மணியளவில் படத்தின் பெயர் ‘மாஸ்டர்’ யுடன் வெளிவந்தது.

கல்வி முறையைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஒரு வாத்தியாராக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதுவரைப் பார்க்காத விஜயைப் பார்ப்பீர்கள் என்று லோகேஷ் தெரிவித்துள்ளார் .

அப்படத்தின் பெயர் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது படத்துக்கு மாஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே