திருவண்ணாமலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்…!

திருவண்ணாமலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அண்ணா நகர், புது தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பிய அவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புத்தாண்டு இரவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கையில் தேசிய கொடி, மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டு சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முழக்கம் எழுப்பினர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கேரளாவை போல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேபோல் திருச்சியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோலமிட்ட பெண்கள் அதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை வரைந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே