நடிகர் சிம்புவின் சமையல் வீடியோ!

ஊரடங்கு இந்தியாவில் அமல் படுத்தப்படுவதற்கு முன்பாகவே சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார் நடிகர் சிம்பு.

ஊரடங்கிற்கு முன்பாக தாய்லாந்தில் மூன்று மாதங்கள் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிம்பு மாநாடு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு பத்து நாட்கள் படப்பிடிப்பு சரியாக நடந்து கொண்டிருந்த வேளையில், கரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சிம்புவே மனது வைத்து தவறாமல் படப்பிடிப்பிற்கு வந்தாலும், இயற்கை சதி செய்வதுபோல இந்த ஊரடங்கு அமைந்துவிட்டது.

சாதாரண நாட்களிலேயே சென்னையிலும் வீட்டிலும் தங்காத சிம்பு, ஊரடங்கு நாட்களில் என்ன செய்யப்போகிறார் என்று நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை வைத்துக் கொண்டிருக்கும்போது வீட்டிற்குள்ளேயே ஓடி உடற்பயிற்சி செய்து வீடியோவை வெளியிட்டிருந்தார் சிம்பு. 

மாநாட்டிற்காக முழுவதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள இந்த ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டதாகவும் பல தகவல்கள் வந்தன.

அடுத்தகட்டமாக சமையலில் இறங்கியிருக்கிறார் நடிகர் சிம்பு.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாக அவருடைய நெருங்கிய நண்பரான விடிவி கணேஷ் வீட்டில் அவர் சமையல் செய்யும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

அப்படி சமையல் செய்யும்போது சமையல் பெண்களின் வேலை என்று விடிவி கணேஷ் குறுக்கிட நமக்காக வரும் பெண்ணை சமையல் செய்வதற்கா பயன்படுத்துவது? நம்மை நம்பி வந்த பெண்ணிற்கு நாம்தான் செய்ய வேண்டும்.

நம் வீட்டுக்கு வருபவர் நமக்கு வேலை செய்வதற்காக வரவில்லை என்று பதிலளித்த சிம்பு, விடிவி கணேஷிடம் செல்லமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதும் வைரலாகி வருகிறது.

வருங்கால மனைவியை சமையல்கட்டில் கஷ்டப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிம்புவிற்குத்தான் இந்த பரந்து விரிந்த சமூகத்தில் ஒரு காதலி கிடைக்கவில்லை என அவரது ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே