லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் தெற்கு ஷோபியான் மாவட்டம் புட்காம் கிராமம், பீர்வாவில் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மாநில போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய குழு அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்து நிலையில், இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 

மேலும் இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே