சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.63 ரூபாய் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் – டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பீகார் தேர்தலை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலை உயர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் பீகார் தேர்தல் முடிந்த உடன் நவம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயரத்தொடங்கியுள்ளது.

கடந்த 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 27 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92 ரூபாய் 25 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 32 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 85 ரூபாய் 63 காசுகள் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே