ராமேஸ்வரம் ரயில் இஞ்சினில் தீ..!

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரத்திலிருந்து, திங்கள், வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில், மாலை 4 மணிக்கு, திருப்பதி புறப்படுகிறது எக்ஸ்பிரஸ் ரயில்.

மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை சந்திப்பு, கொடைரோடு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் போர்ட், திருப்பாத்ரிபுலியூர், விழுப்புரம் சந்திப்பு, திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி சந்திப்பு, பகலா சந்திப்பு வழியாக, திருப்பதிக்கு மறுநாள் காலை 10.35 மணிக்கு சென்று சேருவது வழக்கம்.

இன்று மாலை வழக்கம்போல ரயில், கிளம்பியபோது திடீரென இன்ஜின் பகுதியிலிருந்து தீ கிளம்பியுள்ளது.

இதை தக்க நேரத்தில் பார்த்த, ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தினார்.

இதையடுத்து தீ அணைக்கப்பட்டு, ரயில் கிளம்பியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே