2021-ல் அதிசயம்! ரஜினி கருத்துக்கு எடப்பாடி விளக்கம்

2021-ம் ஆண்டில் அ.தி.மு.க அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

  • எந்த அடிப்படையில் 2021-ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என நடிகர் ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை.
  • ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும்.
  • 2021 ஆம் ஆண்டில் அ.தி.மு.க அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று நடிகர் ரஜினி கூறியிருக்கலாம்.
  • 2021-ம் ஆண்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தலை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின் தான்.
  • அவரே அதை எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே