ஆயுத பூஜையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 5 இடங்களிலிருந்து அரசு பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
ECR வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, பண்ரூடி, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.
வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்பட உள்ளன.
மேற்கண்ட ஊர்களை தவிர மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.