தமிழகத்தில் முதல் முறையாக ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகள் உடன் ஆயிரத்து 695 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து மூன்று நாட்களில் 6145 பேருந்துகள் இயக்கப்படும்.
திருப்பூரிலிருந்து 280 பேருந்துகளும், கோவையிலிருந்து 717 பேருந்துகளும், பெங்களூருவிலிருந்து 245 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை முடிந்த பிறகு அக்டோபர் 8 முதல் 9 வரை பிற ஊர்களில் இருந்து திருப்பூருக்கு 266 பேருந்துகளும், கோவைக்கு 490 பேருந்துகளும், பெங்களூருக்கு 237 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.