நாகை மாவட்டம் இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது என்று அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர்.

சட்டபேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

நாகையில் இருந்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகியவை ஏற்கனவே 5 புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தற்போதைய இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே