சீன அதிபர்க்காக பேனர் வைப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் வைப்பதை தமிழக அரசு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் காலநிலை மாற்றங்கள் குறித்து அவசர பிரகடனம் செய்ய வேண்டும் என பிரதமர் மற்றும் முதல்வரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
நீட் தேர்வில் 50க்கு மேற்பட்டவர்கள் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக குற்ற சாட்டிய அன்புமணி, இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு விட வேண்டும் என வலியுறுத்தினார்.
பேனர் வைப்பது, சுவர் விளம்பரம் செய்வது எல்லாம் தேவையற்றது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.